ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 41

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 41

ஆதம் (அலை) ஹவ்வா (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு இறக்கினான்.

நாம் துஆ கேட்கும்போது நம்முடைய பார்வைகள் மேலே செல்வதும் அல்லாஹ் மனிதனிடம் இயல்பாக உருவாக்கியுள்ளான்.

அல்லாஹ் வானத்தில் அவனது அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான். எப்படி இருக்கிறான் என்பது நாம் அரியமாட்டோம்.

ஆகவே العلي، الأعلى، المتعال என்ற அல்லாஹ்வின் திருப்பெயர்கள் மூலமாக அல்லாஹ் அவனது ذات ஆல் உயர்ந்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அவன் தனது صفت களாலும் உயர்ந்திருக்கிறான். 

அல்லாஹ்வுடைய சில صفت கள் மனிதர்களிடமும் இருக்கும். ஆனால் மனிதர்களுடைய صفت குறைபாடுடையது. அல்லாஹ்வுடைய صفت  உயர்ந்ததும் பரிபூரணமானதுமாக இருக்கிறது.

மனிதன் பார்ப்பான் ஆனால் அவனது பார்வைக்கு ஒரு அளவு இருக்கிறது அதற்குமேல் அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் பார்ப்பது அது போன்றது அல்ல. அவன் அனைத்தையும் பார்ப்பவன் அனைத்தையும் கேட்பவன்.

அல்லாஹ் உயர்ந்தவன் என்றதில் அனைத்தையும் மிகைக்கக்கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான் என்ற கருதும் அதில் இருக்கிறது. அல்லாஹ்வை மிகைப்பதற்கு யாருமில்லை எதுவுமில்லை. அனைத்தையும் விட உயர்ந்தவனாகவும் அடக்கியாளக்கூடியவனாக இருக்கிறான். 

அல்லாஹ் சிலருக்கு சில சக்திகளை கொடுத்திருக்கிறான்.

உதாரணம் 

தஜ்ஜாலுக்கு அல்லாஹ் சில சக்திகளை கொடுத்திருக்கிறான் 

ஷைத்தானுக்கு சில சக்திகளை கொடுத்திருக்கிறான் …..

இவையனைத்தும் மனிதனை  சோதிப்பதற்காகவே அவன் அந்த சக்திகளை கொடுக்கிறான்.  மனிதனுக்கு தாம் தான் மக்களை அடக்கியாளக்கூடியவன் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.

ஸூரத்துந் நாஜிஆத் 79:24

فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰى ۖ‏

“நான்தான்(பிர்அவ்ன்) உங்களுடைய மாபெரும் இறைவன் – ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.

அப்படிப்பட்ட பிர்அவ்னை அல்லாஹ் நடுக்கடலில்  தத்தளிக்க விட்டு உலக முடிவு வரை அவனை ஒரு அத்தாட்சியாக மாற்றியிருக்கிறான்.

ஹாரூனும் தன்னை உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் ஆணவத்தில் இருந்தபோது அல்லாஹ் அவனையும் அவனது மாளிகையும் பூமிக்குள் விழுங்கச்செய்தான்.

அஹ்லா என்பது அல்லாஹ்வின் பெயராகும். அதை மனிதர்களுக்கு சூட்டுவது தவறாகும்.

அபுல் அஹ்லா என்ற ஒரு தலைவரின் பெயர் இருக்கிறது. அல்லாஹ்வின் தந்தை என்று அதற்கு அர்த்தம் வருகிறது. ஆகவே தலைவர்களின் மீதுள்ள பற்றின் காரணமாக பிள்ளைகளுக்கு பெயர்சூட்டுவதில் கவனம் தேவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிலருக்கு அலீ என்று பெயர் வைக்கலாமா என்ற சந்தேகம் எழும்.

அல் அலீ என்று பெயர் வைக்கக்கூடாது. ال சேர்க்காமல் அலீ என்று மட்டும் பெயர் வைப்பதில் தவறில்லை. ஏனெனில் அலீ (ரலி) அவர்களது பெயரை நபி (ஸல்) மாற்றுமாறு கட்டளையிடவில்லை. 

العلي، الأعلى، المتعال என்ற பெயரை புரிந்துகொள்ளும்போது நாம் எத்தனை வசதியும் வலிமையும் படைத்தவர்களாக இருந்தாலும் நாம் ஒன்றுமில்லை என்பதை புரிந்துகொள்வோம். உண்மையான العلي، الأعلى، المتعال அல்லாஹு சுபஹானஹு வ தஹாலா தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஏழை, பணக்காரன், அழகு, அறிவு, எதைக்கொண்டும் நாம் சிறந்தவர்களாக முடியாது. அல்லாஹ் தான் உயர்ந்தவன் மற்றவர்கள் அனைவரும் அவன் முன்னிலையில் தாழ்ந்தவர்களே என்று புரிந்து கொள்ள வேண்டும்.