ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)
பாகம் – 7
இப்னு தைமியா (ரஹ்) தொடர்ந்து கூறுகையில்
குர்ஆனில் உள்ள அத்தியாயங்களிலேயே மிகச்சிறந்ததாகவும், குர்ஆனின் தாய் என்று அழைக்கப்படக்கூடியதாகவும் இருப்பது சூரத்துல் ஃபாத்திஹாவாகும். அதில் அல்லாஹ் தன்னுடைய பெயர்களையும் பண்புகளையும் பதிவு செய்கிறான்.
ஆதாரம்:
- 4474. அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்தபின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன், அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்ததூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள்-(7). பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்-(8). எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள். Volume :5 Book :65 ஸஹீஹ் புஹாரி
- ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்’ என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், ‘ஏனெனில், அந்த பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்’ என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள்.
Volume :7 Book :97 ஸஹீஹ் புஹாரி
மேலும் இமாம் இப்னு தய்மியா (ரஹ்) அவர்கள் கூறுகையில் :-
இந்த ஹதீஸின் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் அல்லாஹ்வின் சிஃபத்துக்களை யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ் ஒருவரை விரும்பி விட்டால் அவன் தனது வானவர்களை அழைத்து நான் இவரை விரும்புகிறேன் நீங்களும் இவரை விரும்புங்கள் என்று கூறுவான். அதற்குப் பிறகு நல்ல மனிதர்களெல்லாம் அவரை விரும்ப ஆரம்பிப்பார்கள்
💕 மேற்கூறப்பட்ட அத்தனை விஷயங்களும் அல்லாஹ்வை பற்றிய அறிவதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்த போதுமானவையாக இருக்கிறது. இது ஈமானின் அடிப்படைகளில் மிகப்பிரதானமானது என்று நமக்கு புரிய வைக்கிறது, மேலும் மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று என்றும், அதில் தான் மார்க்கத்தின் முக்கிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன என்றும் புரிய வைக்கிறது.
ஆசிரியர் கூறுகிறார்:– தங்களை படைத்த, தங்களுக்கு படியளக்கும் அல்லாஹ்வை பற்றி அறியாமலிருந்தால் எப்படி மக்களின் நிலைமைகள் சீராகும்? அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும் பண்புகளையும் அறியாமல் எப்படித்தான் அவர்களுடைய வாழ்வு சீராகும்? மக்களுக்காக எது படைக்கப்பட்டதோ அதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் எதற்காக மக்கள் படைக்கப்பட்டார்களோ அதில் அவர்கள் பொடுபோக்காகி விட்டார்கள்.
ஸூரத்துல் முனாஃபிஃகூன் 63:9
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
கருத்துரைகள் (Comments)