ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)
பாகம் – 9
🌷 مَا بَقِيَ شَيْءٌ يُقَرِّبُ مِنَ الْجَنَّةِ وَيُبَاعِدُ مِنَ النَّارِ إِلا وَقَدْ بُيِّنَ لَكُمْ
நபி (ஸல்) – உங்களை சுவர்க்கத்தின் பால் நெருக்கக்கூடிய மேலும் நரகத்திலிருந்து தூரமாக்கக்கூடிய எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தெளிவுபடுத்தப்படாமல் விடப்படவில்லை
(முஹ்ஜமுல் கபீர் – இமாம் தபரணீ)
🌷 அல்லாஹ்வை பற்றிய அறிவில் தான் மனிதனின் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது. அல்லாஹ்வை அறிந்தால் மட்டுமே இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஸூரத்துந் நஹ்ல் 16:97
مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً ۚ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا
يَعْمَلُوْنَ
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
ஸூரத்துல் அன்ஆம் 6:82
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ
எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
கருத்துரைகள் (Comments)