அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 14
[highlight color=”black”]எல்லோருக்கும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் என்று நம்புதல்[/highlight]
ஸூரத்துல்ஆல இம்ரான்3:18
شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ
الْحَكِيْمُؕ
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
ஸூரத்துல் அன்ஆம்6:19
قُلْ اَىُّ شَىْءٍ اَكْبَرُ شَهَادَةً ؕ قُلِ اللّٰهُ ۙ شَهِيْدٌ ۢ بَيْنِىْ وَبَيْنَكُمْ وَاُوْحِىَ اِلَىَّ هٰذَا الْـقُرْاٰنُ
لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْۢ بَلَغَ ؕ اَٮِٕنَّكُمْ لَـتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰىؕ قُلْ لَّاۤ اَشْهَدُ ۚ قُلْ اِنَّمَا
هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ وَّاِنَّنِىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَۘ
(நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்
நபி ஸல் – மறுமையில் நரகில் இருப்பவரிடம் அல்லாஹ் கேட்பான் இந்த உலகத்தையும் அதில் உள்ளவரையும் பகரமாக தந்து இந்த நரகை விட்டு வெளியேற நீ விரும்பவில்லையா என்று கேட்பான் அதற்கவன் ஆம் என்றதும் அல்லாஹ் கூறுவான் அதை விட எளிமையானதை தானே உலகில் உன்னிடம் நான் கேட்டேன் என்று பதில் கூறுவான்.
கருத்துரைகள் (Comments)