அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 119

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 119

(3) நல்ல பண்புடையவராக இருக்க வேண்டும்

ஷேக் அல்பானி – உண்மையென்பது உள்ளத்திற்கு பாரமானது நம்முடைய பண்புகளால் பாரத்தை நாமாகவே அதிகரித்துவிடக்கூடாது.

عليك بالرفق

நபி (ஸல்) ஆயிஷா (ரலி) இடம் வாகனத்திடம் மென்மையாக நடந்துகொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்

إِنَّ الرِّفْقَ لا يَكُونُ فِي شَيْءٍ إِلا زَانَهُ ، وَلا نُزِعَ مِنْ شَيْءٍ إِلا شَانَهُ

நளினம் எந்த ஒன்றோடு கலந்தாலும் அதை அழகாக்கிவிடும் எந்த ஒன்றை விட்டு போனாலும் அதை அலங்கோலமாக்கிவிடும்.(முஸ்லீம்)

ஸூரத்துல்ஆல இம்ரான் 3:159

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ

عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ

الْمُتَوَكِّلِيْنَ‏

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.

❣அழகிய முறையில் தீமையை தடுக்கக்கூடியவர்களாக இருக்க நாம் முயற்சிக்க வேண்டும்.