அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 120

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 120

(4) உளவுபார்த்து தீமையை கண்டு பிடித்து தடுக்கக்கூடாது

المؤمن غِر كريم والفاجر خب لئيم

ஒரு முஃமின் எப்பொழுதும் ஏமாறக்கூடிய சங்கையுள்ள தன்மையுள்ளவன்

إنما المؤمن كالجمل الأنف، حيثما قيد انقاد

ஒரு முஃமின் ஒட்டகத்தின் கடிவாளம் வளைப்பது போல வளைவான். (அவனிடம் பிடிவாத குணம் இருக்காது; மென்மையான குணம் கொண்டவனாக இருப்பான்).

முனாபிக்குகளின் இயல்பு:

சூரா அல் முனாஃபிகூன் 63:4

كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ…

சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்.(எந்த மாற்றமும் இருக்காது)

சூரா அல்ஹுஜுராத் 49:12

وَّلَا تَجَسَّسُوْا

நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்…

❣நபி (ஸல்) – பிறரை அவமானப்படுத்துபவனை தன்னுடைய வீட்டில் அல்லாஹ் அவமானப்படுத்துவான்.

❣நபி (ஸல்) – என் தோழர்களை பற்றிய தவறான செய்திகளை என்னிடம் கூற வேண்டாம் நான் அவர்களை நல்ல நிலையில் சந்திக்க விரும்புகிறேன்.

اِطَّلَعَ رَجُلٌ مِنْ جُحْرٍ فِي حُجَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَمَعَ النَّبِيِّ صَلَّى اللهُ

عَلَيْهِ وَسَلَّمَ مِدْرىً يَحُكُّ بِهِ رَأْسَهُ ، فَقَالَ : (( لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْظُرُ ، لَطَعَنْتُ بِهِ فِي

عَيْنِكَ ، إِنَّمَا جُعِلَ الاسْتِئْذَانُ مِنْ أَجْلِ الْبَصَرِ ((.

நபி (ஸல்) வின் வீட்டில் ஒருவர் எட்டிப்பார்த்தார் அப்போது நபி (ஸல்) தலை வாரிக்கொண்டிருந்தார்கள் அப்போது நபி (ஸல்) உங்கள் கண்களை சீப்பால் நோண்டியிருப்பேன் என்று கூறிவிட்டு அவரிடம் அனுமதி கேட்பதென்பதே பார்வைக்காகத்தான் என்று கூறினார்கள்.