அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 129

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 129

3 – அபூபக்கர் (ரலி) நபித்தோழர்களிலேயே சிறந்தவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் பிறகு  உமர் (ரலி) பிறகு உஸ்மான் (ரலி) பிறகு அலி (ரலி) என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

لَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلا مِنْ أُمَّتِي لاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلا , وَلَكِنْ أَخِي وَصَاحِبِي فِي

الْغَارِ ” . وَإِنَّ أَحَقَّ مَنْ يُعِينُنِي بِهِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو بَكْرٍ

நபி (ஸல்) – மனிதர்களில் ஒருவரை என்னுடைய உற்ற நண்பராக எடுக்க வேண்டுமென்றால் அபூபக்கரை என்னுடைய உற்ற நண்பராக எடுத்திருப்பேன். அவர் எனது சகோதரரும் என் தோழருமாக இருக்கிறார்.

عن ابن عمر رضي الله عنهما قال كنا نخير بين الناس في زمن النبي صلى الله

عليه وسلم فنخير أبا بكر ثم عمر بن الخطاب ثم عثمان بن عفان رضي الله عنهم

இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) உயிரோடிருக்கும் காலத்தில் மக்களில் சிறந்தவர்கள் அபூபக்கர் பிறகு உமர் பிறகு உஸ்மான் பிறகு அலி ரலியல்லாஹு அன்ஹும் என்று கூறக்கூடியவர்களாக இருந்தோம்.(புஹாரி)

♦️ அலீ (ரலி) – நபி (ஸல்) – நபிக்கு பின்னால் மிக சிறந்தவர் இந்த உலகத்தில் யாரென்று சொல்லவா என்று கேட்டு அபூபக்கர் பிறகு உமர் என்றார்கள். 3வது சொல்லவா என்று கேட்டு உஸ்மான் (ரலி) என்று கூறினார்கள்.