அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 30
(10) அல்லாஹ்வுடைய பண்புகளை அணுகும் நேரத்தில் தவிர்க்க வேண்டியவை
அல்லாஹ்வுடைய பண்புகளை (ஐஸ்பாத்) ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் எது தனக்கு இருக்கிறது என்று சொல்கிறானோ அது அவனுக்கு இருக்கிறது என நம்ப வேண்டும் மேலும் அதற்கு உதாரணம் சொல்ல கூடாது…….,
تعطيل ↔ நிராகரிப்பது
تشبيه/ تحريف ↔ ஒப்பிடுவது
تمثيل ↔ உதாரணம் சொல்லக்கூடாது
تكييف ↔ முறைப்படுத்துவது(நாம் செய்து காட்டுவது)
இமாம் மாலிக் இப்னு அனஸ் இடம் ஒருவர் அர்ஷில் அல்லாஹ் ஆகிவிட்டான் என்றால் என்ன?
الاستواء معلوم، والكيف مجهول، والإيمان به واجب، والسؤال عنه بدعة،
↔ الاستواء معلوم
இஸ்திவாஹ் என்றால் என்ன என்பது தெரிந்த விஷயம்
எப்படி என்பது தெரியாது ↔ والكيف مجهول
அதை நம்புவது கட்டாயமாகும் ↔ والإيمان به واجب
அதை பற்றி கேட்பது பித்அத்தாகும் ↔ والسؤال عنه بدعة
- என்று கூறிவிட்டு கேள்வி கேட்டவரை வெளியேற்றச்சொன்னார்கள்.(கேள்வி கேட்டவரை வெளியேற்றியது பற்றி ஷேக் அல்பானி -இது இமாம் மாலிக்கின் காலகட்டத்தின் நிலைப்பாடு).
- முஃபவ்விதா என்ற வழி கெட்ட கூட்டத்தினர் அல்லாஹ் அர்ஷில் ஆகிவிட்டான் என்றால் என்ன என்றே எங்களுக்கு தெரியாது என்று கூறினர். அல்லாஹ்வுடைய விஷயத்தில் கருத்து இல்லை என்பார்கள்.
- குர்ஆன் படைக்கப்பட்டதா இல்லையா என்ற கருத்துவேறுபாட்டில் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பலிடம் இதை பற்றி ஸஹாபாக்கள் பேசவில்லையே நாம் பேச வேண்டுமா என்று கேட்டபோது ஸஹாபாக்களின் காலத்தில் அதை பேசியிருக்க கூடாது ஆனால் இன்றைக்கு அதை நாம் பேச வேண்டும் என்றார்கள். பித்னா உண்டானதற்கு பின்னால் மௌனம் காப்பது தவறு.
🌙 சூரா அஷ்ஷூரா 42:11
لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.
இறைவனது கேட்டலும் பார்த்தலும் நம்முடைய கேட்டலும் பார்த்தலுக்கும் போல அறவே அல்ல. அதை நம்முடன் ஒப்பிடுவதும், நிராகரிப்பதும், உதாரணம் கூறுவதும், அதை போன்று செய்து காட்டுவதும் மிகப்பெரும் தவறாகும்.
கருத்துரைகள் (Comments)