அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 32
⚜ அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், கோபப்படுகிறான், ரோஷமுள்ளவன், வெட்கமுள்ளவன், அல்லாஹ்வுடைய கை, அல்லாஹ்வுடைய முகம், அல்லாஹ்வுடைய கெண்டைக்கால் என்றெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் வருகிறது. அது எப்படி கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கே உள்ள தகுதியில் அது இருக்கிறது என்று நம்ப வேண்டும் அதை யாருடனும் எதனுடனும் ஒப்பிட முடியாது;ஒப்பிடக் கூடாது.
ஸூரத்துல் பகரா 2:255
وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ
அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்து கொள்ள முடியாது…
ஸூரத்துல் பகரா 2:19
وَاللّٰهُ مُحِيْطٌۢ بِالْكٰفِرِيْنَ
அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
⚜ இறைவனுக்குக் கோபம் உண்டு; ஆனால் அது உலகில் எவருடைய கோபத்தைப் போன்றும் அல்ல.
அல்லாஹ் இரவின் கடைசி பகுதியில் முதலாம் வானத்திற்கு இறங்கி வருவதை கேள்வி கேட்பவர்கள் அல்லாஹ்வைப் படைப்பினங்களுடன் ஒப்பிடுகிறார்கள். நேரத்தையும் காலத்தையும் படைத்தவன் அல்லாஹ் ,நேரமும் காலமும் இல்லாத காலத்தில் இருந்தவன் அல்லாஹ் என்பதை புரிந்து கொண்டால் விளக்கம் கொடுக்க முயற்சிக்க மாட்டார்கள்.
கருத்துரைகள் (Comments)