அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 41
மலக்குமார்கள் பல தோற்றங்களில் வருவார்கள்
மலக்குமார்கள் மனித உருவத்தில் வந்தாலும் வந்தது மலக்கு தான் என்று உடனடியாக நபிமார்கள் அறிந்து கொள்ளவில்லையென்றாலும் பிறகு புரிந்து கொள்வார்கள்.
உதாரணம்:
💠 (அருவெறுப்பான தோற்றங்களில் வர மாட்டார்கள்)
💠 உம்மு ஸலமா (ரலி) – எங்கள் வீட்டிற்கு திஹ்யா அல் கலபீ வந்தார்கள் நபி (ஸல்) உடன் பேசிவிட்டு சென்றார்கள். அப்போது நபி (ஸல்) வந்தது யாரென்று தெரியுமா என்று கேட்டபோது நான் திஹ்யா என்றேன் அதற்கு நபி (ஸல்) இல்லை வந்தவர் ஜிப்ரஈல் (அலை) என்றார்கள். அது வரை அவரை திஹ்யா என்றே நினைத்திருந்தேன்.
💠 இப்ராஹிம் (அலை) மலக்குமார்களுக்கு சமைத்த கறியை உண்ணக்கொடுத்தார்கள்.
💠 மர்யம் (அலை) – (சூரா மர்யம் 19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்) என்று ஜிப்ரஈல் (அலை) என்று தெரியாமல் பிரார்த்தித்தார்கள்.
💠 லூத் (அலை) வீட்டில் மலக்குகள் வந்தபோது ஆரம்பத்தில் அவர்கள் மலக்குகள் என்று புரியாமல் அவர்களை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று தன் ஊராரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
🌺 சூரா அல் ஹிஜ்ர் 15:68
قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِىْ فَلَا تَفْضَحُوْنِۙ
(லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
💠 அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நாங்கள் நபி (ஸல்) வின் சபையில் அமர்ந்துகொண்டிருக்கும்போது ஒரு மனிதர் வந்தார் அவருடைய முடி கருமையாக இருந்தது. ஆடை வெண்மையாக இருந்தது பிரயாணத்தின் எந்த அடையாளமும் தோன்றவில்லை.நபி (ஸல்) விடம் மறுமை எப்போது வரும் என்று கேட்டபோது நபி (ஸல்) கேட்கப்பட்டவரை விட கேட்பவரே அறிந்தவர் என்றார்கள். அவர் கேள்விகள் கேட்டு திரும்பியதும் நபி (ஸல்) வந்தவர் ஜிப்ரஈல் (அலை) என்று கூறும்வரை ஸஹாபாக்கள் அறிந்திருக்கவில்லை.
கருத்துரைகள் (Comments)