அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 43
மலக்குமார்கள் எங்கெல்லாம் வர மாட்டார்கள்
- உருவமுள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள்
- நாய் உள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள்
💠 நபி (ஸல்) ஒரு முறை தன் வீட்டில் தேடிக்கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு சிறிய நாய்குட்டி இருந்தது அதை வெளியே போட்டார்கள். பிறகு ஜிப்ரஈல் (அலை) இடம் நீங்கள் வருவதாக கூறிய நேரத்தில் வரவில்லையே என்று கேட்டபோது நாய் உள்ள வீடுகளுக்கு நாங்கள் வர மாட்டோம் என்று ஜிப்ரஈல் (அலை) கூறினார்கள்.
من أكل البصل والثوم والكراث فلا يقربن مسجدنا، فإن الملائكة تتأذى
مما يتأذى منه بنو آدم
💠 நபி (ஸல்)- யாரொருவர் வெங்காயம் பூண்டு போன்ற துர்நாற்றம் அடிப்பவையை உண்டாறோ அவர் மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். நிச்சயமாக ஆதமின் மகனுக்கு எரிச்சலூட்டக்கூடிய அனைத்து காரியங்களிலும் மலக்குகளும் எரிச்சலடைவார்கள்
عن أبي هريرة أن رسول الله – صلى الله عليه وسلم – قال : الملائكة تصلي
على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث ، اللهم اغفر له اللهم
ارحمه
💠 ஒரு மனிதர் தொழுகை முடிந்து அதே இடத்தில அமர்ந்திருக்கும் போது மலக்குமார்கள் அவருடைய பாவமன்னிப்பிற்காக அல்லாஹ் விடம் துஆ செய்து கொண்டே இருப்பார்கள் அவருடைய உளூ முறியும் வரை.
கருத்துரைகள் (Comments)