அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 49

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 49

“إِنَمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنْ الأمَمِ كَمَا بَيْنَ صَلاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَمْسِ،

أُوتِيَ أَهْلُ التَوْرَاةِ التَوْرَاةَ فَعَمِلُوا، حَتَى إِذَا انْتَصَفَ النَهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطاً

قِيرَاطاً، ثُمَ أُوتِيَ أَهْلُ الإنْجِيلِ الإنْجِيلَ فَعَمِلُوا إِلَى صَلاةِ الْعَصْرِ، ثُمَ عَجَزُوا فَأُعْطُوا

قِيرَاطاً قِيرَاطاً، ثُمَ أُوتِينَا الْقُرْآنَ فَعَمِلْنَا إِلَى غُرُوبِ الشَمْسِ، فَأُعْطِينَا قِيرَاطَيْنِ

قِيرَاطَيْن فَقَالَ أَهْلُ الْكِتَابَيْنِ: أَيْ رَبَنَا، أَعْطَيْتَ هَؤُلاءِ قِيرَاطَيْنِ قِيرَاطَيْن، وَأَعْطَيْتَنَا

قِيرَاطاً قِيرَاطاً، وَنَحْنُ كُنَا أَكْثَرَ عَمَلاً، قَالَ: قَالَ اللَّه عَزَّ وَجَلَّ: هَلْ ظَلَمْتُكُمْ مِنْ أَجْرِكُمْ

مِنْ شَيْءٍ ؟ قَالُوا: لا، قَالَ: فَهُوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ.”    رواه البخاري.

இப்னு உமர் (ரலி) – உங்களுக்கு முன்னால் கடந்து சென்ற மக்களுடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டால் அஸர் தொழுகைக்கும் மக்ரிப் தொழுகைக்கும் இடைப்பட்ட காலம் போன்றதாகும் தவ்ராத் கொடுக்கப்பட்டவர்களுக்கு இறைவன் தவ்ராத்தை வழங்கினான் அவர்கள் பகல் வரை அதைக்கொண்டு அமல் செய்தார்கள்.  அவர்கள் லுஹருடன் கலைப்படைந்ததால் அவர்களுக்கு ஒரு கீராத் நன்மையை அல்லாஹ் வழங்கினான். இன்ஜீல் கொடுக்கப்பட்டவர்களுக்கு இன்ஜீல் கொடுக்கப்பட்டது அவர்கள் அதைக்கொண்டு அஸர் வரை அமல் செய்தார்கள் அவர்கள் கலைப்படைந்ததால் அவர்களுக்கு ஒரு கீராத் நன்மை கொடுக்கப்பட்டது. பிறகு உங்களுக்கு குர்ஆன் கொடுக்கப்பட்டிருக்கிறது நீங்கள் அதைக்கொண்டு சூரியன் மறையும் வரை அமல் செய்தீர்கள் உங்களுக்கு 2 கீராத் கொடுக்கப்படுகிறது   வேதக்காரர்கள் கேட்டார்கள் (அல்லாஹ்விடம்)எங்களை விட குறைந்த வேலை செய்து கூடுதல் கூலி கொடுக்கப்படுகிறார்களே என்று கேட்கப்பட்டது அல்லாஹ் கூறினான் உங்களுக்கு தர வேண்டிய கூலியில் எதையாவது நான் குறைத்தேனா? அவர்கள் இல்லை என்று கூறியதும்   அது எனது சிறப்பு நான் நாடியவருக்கு அதிகமாக கொடுப்பேன் என அல்லாஹ் கூறினான் (புஹாரி)

❣ இந்த ஹதீஸில் தவ்ராத், இன்ஜீல்,குர்ஆன்  குறிப்பிடப்பட்டுள்ளது.