அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 50
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ ( خُفِّفَ عَلَى
دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ القُرْآنُ ، فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسْرَجُ ، فَيَقْرَأُ القُرْآنَ قَبْلَ أَنْ تُسْرَجَ
دَوَابُّهُ ، وَلاَ يَأْكُلُ إِلَّا مِنْ عَمَلِ يَدِهِ )
💠 அபூஹுரைரா (ரலி) -தாவூத் (அலை) மீது குர்ஆன்(ஜபூர்) இலகுவாக்கப்பட்டிருந்தது; ஒட்டகத்திற்கு சாய்மானம் தயார்செய்யும் வரை அவர் குர்ஆனை ஓதுவார் -(புஹாரி)
💠 இந்த ஹதீஸில் தாவூத் (அலை) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது
💠 நபி (ஸல்) ஒரு ஜனாஸாவை கடந்து செல்லும்போது ஒரு யூதர் நபி (ஸல்) விடம் நீங்கள் பேசினால் இந்த ஜனாஸாவிற்கு கேட்குமா என்றார்கள் அதற்கு நபி (ஸல்) பதிலளிக்கவில்லை 3 முறை கேட்டுவிட்டு யூதர் ஜனாஸாவிற்கு கேட்கும் என பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) வேதக்காரர்கள் மார்க்க ரீதியில் ஏதேனும் செய்திகளை உங்களிடம் பேசினால் நீங்கள் உண்மை படுத்தவும் வேண்டாம் பொய்ப்படுத்தவும் வேண்டாம்.அவர்கள் சொல்லும் செய்தியை அறிவிப்பதில் குற்றமில்லை.
💠 அவர்களது வேதத்திலிருந்து அவர்கள் சொல்லியிருக்கக்கூடும் என்பதற்காகவே நபி (ஸல்) இப்படி உபதேசித்தார்கள்.
கருத்துரைகள் (Comments)