அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 57
💠குர்ஆனில் வசனங்கள் இறக்கப்பட்ட வரிசையில் குர்ஆன் தொகுக்கப்படவில்லை மாறாக நபி (ஸல்) தொகுக்க சொன்ன முறைப்படி தான் தொகுக்கப்பட்டிருக்கிறது.
💠 ஸைத் இப்னு ஸாபித் (ரலி) குர்ஆனை ஒன்று திரட்டும் பணிக்காக நியமிக்கப்பட்டார்கள். அவர் ஒரு நிபந்தனை வைத்துக்கொண்டார்கள். யார் தன்னிடமுள்ள பிரதியை ஒப்படைத்தாலும் அது நபியவர்களின் முன்னிலையில் எழுதப்பட்ட இன்னொரு பிரதியை வைத்து உறுதிப்படுத்துவார்கள் அல்லது அதற்கு மேலும் ஒரு சாட்சியை கேட்டு சாட்சியின் மூலமாகவும் உறுதிப்படுத்திக்கொண்டார்கள். ஸைத் (ரலி) அவர்களும் ஒரு ஹாஃபிழ் என்பது குறிப்பிடத்தக்கது.
💠 ஸைத் (ரலி) – சூரத்து தவ்பா வில் 9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ … என்ற வசனத்தை எழுத்தில் என்னால் காணமுடியவில்லை ஆனால் நபி (ஸல்) அதை ஓத நான் கேட்டிருக்கிறேன். அந்த வசனம் யாரிடத்தில் இருக்கிறது என்று தேடிப்பார்த்ததில் ஹுசைமத் இப்னு ஸாபித் (ரலி) விடம் அது இருந்தது. அவரை நபி (ஸல்) இரண்டு சாட்சிக்கு சமமானவர் என்று கூறியிருந்ததால் நான் இன்னொரு சாட்சி கேட்கவில்லை. ஆகவே அது கிடைத்ததும் அந்த சூரத்தில் அதை தொகுத்து விட்டேன் அபூபக்கர் (ரலி) யின் காலத்தில் தொகுப்புகள் அவரிடம் இருந்தது. (புஹாரி)
கருத்துரைகள் (Comments)