அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 61
💠 தூதர்களை அனுப்பவேண்டும் என்ற எந்த ஒரு கடமையும் அல்லாஹ்வுக்கு இல்லை. நபிமார்களை அனுப்பியது அவனது ரஹ்மத்தின் பலனாகும். அவரவர்களின் மொழியை பேசக்கூடிய தூதராகவே அல்லாஹ் அனுப்பினான்.
🌺 ஸூரத்துன்னிஸா 4:165
رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ ؕ وَكَانَ اللّٰهُ
عَزِيْزًا حَكِيْمًا
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
🌺 ஸூரத்துந் நஹ்ல் 16:36
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَۚ
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்.
கருத்துரைகள் (Comments)