அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 64
💠 குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் ஒவ்வொரு நபிமார்களும் தொழில் செய்து பிழைத்தவர்கள் என்று விளங்கமுடிகிறது.
💠 عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” ما من نبي
إلا وقد رعى الغنم . قالوا : وأنت [ ص: 57 ] يا رسول الله ؟ قال : نعم ، كنت
أرعاها بالقراريط لأهل مكة ” . رواه البخاري .
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – எந்த ஒரு நபியாக இருந்தாலும் அவர்கள் ஆடு மேய்த்திருப்பார்கள் என்றபோது நீங்களுமா யா ரசூலுல்லாஹ் என்று கேட்கப்பட்டபோது ஆம்; மக்காவாசிகள் தரக்கூடிய அற்பமான ஹலாலாக்களுக்காக (பணத்திற்க்காக) ஆடு மேய்த்திருக்கிறேன் என பதிலளித்தார்கள் (புஹாரி, முஸ்லீம்)
💠 وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَام كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِه
நபி (ஸல்) – தாவூத் (அலை) தன் கையால் உழைத்து சாப்பிடக்கூடியவராக இருந்தார்கள்.
கருத்துரைகள் (Comments)