அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 90
இறைவனை நெருங்குவதற்கான உண்மையான ஊடகங்கள்
🔵 ஸூரத்துல் அலஃக் 96:19
كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩
(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி – செழிப்பான நேரத்தில் இறைவனை நெருங்குங்கள் கஷ்டம் வரும் நேரத்தில் இறைவன் உங்களை பார்த்துக்கொள்வான் (அஹ்மத்)
إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ
إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ
كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ
الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ
أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ் கூறுகிறான்-ஒரு அடியான் என்னை கட்டாயமாக்கப்பட விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் தான் என்னை நெருங்குகிறான். என்னை சுன்னத்தான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக்கொண்டே இருப்பான் நான் அவனை விரும்பும் வரை. நான் அவனை விரும்பி விட்டால் நான் அவன் கேட்கின்ற காதாக, பேசுகின்ற வாயாக, நடக்கின்ற காலாக பிடிக்கின்ற கையாக நான் இருப்பேன்.
கருத்துரைகள் (Comments)