அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 93
3 – உயிருடனிருக்கும் நல்ல மனிதரிடம் துஆ கேட்க சொல்வது
நபி (ஸல்) இறந்த பிறகு மழை வேண்டி பிரார்தித்தபோது உமர் (ரலி) உயிருடன் இருந்த அப்பாஸ் (ரலி) விடம் தான் மழை வேண்டி பிரார்த்திக்க சொன்னார்களே தவிர இறந்த நபி (ஸல்) விடம் எங்களுக்காக துஆ செய்யுங்கள் என்று கூறவில்லை.
எந்த நபித்தோழர்களும் நபி (ஸல்) விடம் என் பாவங்களை மன்னியுங்கள் என்று சொல்லவில்லை எனக்காக பாவ மன்னிப்பு தேடுங்கள் என்று தான் சொன்னார்கள்
நபி (ஸல்) விடம் மழையை கேட்கவில்லை மழை வருவதற்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள் என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள்.
இறந்தவர்களிடம் துஆ செய்வதும் துஆ செய்யச்சொல்வதும் மிகப்பெரும் தவறு தான். இது தெளிவான ஷிர்க் (இணைவைப்பாகும்)
கருத்துரைகள் (Comments)