அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 109

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 109

💕 அற்புதங்கள் நபிமார்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும் நடப்பது போலவே மோசமானவர்களுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே அற்புதங்களை வைத்து ஒருவரை நல்லவர் என்று முடிவெடுக்க முடியாது

💕 நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் அற்புதம் எந்த சவாலாலும் முறிக்க முடியாததாக இருக்கும்.

நல்லவர்களுக்கு நடக்கும் அற்புதம் அவர்களை உறுதிப்படுத்தும் வகையில் தான் இருக்கும்

கெட்டவர்களுடைய கையாலும் அற்புதங்கள் நடக்கும் ஆனாலும் அவர்கள் கெட்டவர்கள் என்பதற்கு அவர்களுடைய வாழ்வே சாட்சியாக இருக்கும்.

💕 முஹ்தஸிலாக்கள் நபிமார்களுக்கு மட்டுமே அற்புதம் நடக்கும், நல்லவர்களுக்கோ கெட்டவர்களுக்கோ அற்புதம் நடக்காது என மறுத்தார்கள் ஏனெனில் அற்புதம் நடந்தால் அவர்களுக்கும் நபிமார்களுக்கும் என்ன வித்தியாசம் என புத்திப்பூர்வமான வாதமாக நினைத்து வாதிக்கின்றனர். ஆனால் நாம் கூறுகிறோம் அற்புதம் அனைவருக்கும் நடக்கும் ஆனால் நபிமார்களுக்கு நடக்கும் அற்புதம் சவால் விடத்தக்கதாக இருக்கும் என நாம் நம்புகிறோம்.

💕 நல்லவர்களுக்கு அல்லாஹ் அவர்களை சங்கைப்படுத்துவதால் அதை நாம் கராமத் என்று நாம் கூறுகிறோம்.

💕 கெட்டவர்களுக்கு அற்புதம் நடக்கும் என்பதற்கு தஜ்ஜாலின் சம்பவங்களே சாட்சியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவன்  தன்னைத் தானே அல்லாஹ் என்று கூறிக்கொண்டு அற்புதங்களை செய்வான்.