அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 110

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 110

நல்ல விஷயங்களை ஏவுதல் வாஜிப் கெட்ட விஷயங்களை தடுத்தல் வாஜிப் மேலும் அவைகளுடைய ஒழுக்கங்கள்

நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும் அகீதாவின் ஒரு பகுதியாகும்

عن أبي سعيد الخدري قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : من

رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ،

وذلك أضعف الإيمان . رواه مسلم

அபூஸயீது அல் ஹுத்ரி (ரலி) -நபி (ஸல்) – உங்களில் யார் ஒரு தீமையை காண்கிறாரோ அதை தன் கையால் (அதிகாரத்தால்)தடுக்கட்டும்அதற்கு அவர் சக்திபெறவில்லையென்றால் நாவால் தடுக்கட்டும்அதுவும் அவரால் முடியவில்லையென்றால் உள்ளத்தால் அதை அவர் வெறுக்க வேண்டும் அது தான் அவரது ஈமானின் குறைந்த படித்தரமாகும்

🏵 அதிகாரபூர்வமாக ஒரு தீமையை தடுக்க சக்தியிருந்தும் தடுக்கவில்லையென்றால் அவரது கொள்கையில் குறைபாடு இருக்கிறது.

🏵 முஹ்தஸிலாக்கள் தான் வரலாற்றில் முதல் முறையாக முஹ்ஜிஸத் என்ற வார்த்தை உபயோகித்ததாக கருதப்படுகிறது.