அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 13

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 13

மனிதனுடைய உள்ளம் ருபூபிய்யத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. நோய் ஏற்பட்டாலும் குணமடையும் போதும் அது இறைவனின் ஏற்பாடு என்பது மனிதன் புரிந்து தான் இருக்கிறான்.

இறைவன் தான் இந்த முழு உலகத்தையும் தனித்து ஆள்கிறான். அவன் ஒருவன் தான் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடுகின்றான் வேறு கொண்டாடியதும் இல்லை.

 ஸூரத்து யூனுஸ் 10:31

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

 ஸூரத்து யூனுஸ் 10:32

உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?

இறைவன் ஒருவனால் தான் படைப்புகள் உருவாக்கப்பட்டன என நம்புதல் படைப்பிலும் நிர்வாகத்திலும் இறைவன் தனித்தவன்.