உசூலுல் ஹதீஸ் பாகம் 23

உசூலுல் ஹதீஸ்

பாகம்-23

 

 அப்துல்லாஹ் இப்னு ஹப்பாப் இப்னு அரத் என்பவர் அலீ (ரலி) வின் கவர்னராக இருந்தார்கள். அவர்களுடன் கர்ப்பமான நிலையில் அவர்களின் அடிமைப்பெண் இருந்தார்கள். இருவரையும் கொடூரமான முறையில் கொன்று அந்த பெண்ணின் வயிற்றிலிருக்கும் பிள்ளையை வெளியேற்றினார்கள். இந்த செய்தி அலீ (ரலி) விற்கு கிடைத்தபோது ஷாமிற்கு செல்லவேண்டிய படையை திரட்டி ஹவாரிஜுகள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர்கள் அனைவரையும் அழித்தார்கள் அவர்களில் 10 பேர் தான் எஞ்சியிருந்தார்கள்.

 இந்த தோல்விக்கு பிறகு அவர்களது கருத்துக்களை ஒளிந்திருந்து பரப்பக்கூடியவர்களாக இருந்தார்கள். அதில் ஒருவன் தான் அலீ (ரலி) யை கொன்ற அப்துல் ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பவன் அவன் அலீ (ரலி) சுபுஹ் தொழும் நேரத்தில் அவர்களை கொன்றான்.

 அலீ (ரலி) வின் மரணத்திற்கு பின்னர் அவரது மகன் ஹசன் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். சிறிது காலத்திற்கு  பிறகு தனது ஆட்சியை முஆவியா (ரலி) விடமே ஹசன் (ரலி) ஒப்படைத்தார்கள்.