உசூலுல் ஹதீஸ்
பாகம்-26
🔷 உஸ்மான் (ரலி) காலத்தில் குர்ஆ என்ற துறவிகள் அல்லது கூடுதலாக வணக்கங்கள் செய்யக்கூடிய கூட்டத்தினர். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவரது 18 கவர்னர் களில் ஐவர் அவரது கோத்திரத்தினராக இருந்ததால் அவர் தனது உறவினர்களுக்கு அதிகாரத்தில் பங்குகளை அதிகம் வழங்கி விட்டதாக குற்றம் சாட்டினர். உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினர்கள் ஆட்சி சம்மந்தப்பட்ட விஷயத்தில் நடந்து கொண்ட சில விஷயங்களில் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்ட காரணத்தினால் உஸ்மான் (ரலி) வை கண்டித்தார்கள். ஆயினும் அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை காஃபிர் என்று கூறவில்லை. உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதன் பிறகு அலீ (ரலி) அவர்களுடன் இணைந்து கொண்டு ஜமல் யுத்தத்தில் கலந்து கொண்டார்கள்.
🔷 பின்பு அலீ (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டபோது; இவர்கள் அலீ (ரலி) உடனிருந்தார்கள். ஒரு மத்யஸ்தரின் வார்த்தைக்கு அலீ (ரலி) கட்டுப்பட்டதுடன் குர்ஆவினர் அலீ (ரலி) வை விட்டும் விலகினர். உஸ்மான் (ரலி) யை கொன்றவர்கள் கிளர்ச்சியாளர்கள். அதன் விளைவாக ஏற்பட்ட குழப்பத்தில் அலீ (ரலி) ஒரு நடுவரின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு போரிலிருந்து பின்வாங்கியதை தவறு என்று கூறி வெளியேறியவர்களே ஹவாரிஜுகள் ஆவர். இவர்களை தான் நாம் ஹவாரிஜ் என்று கூறுகிறோம்.
கருத்துரைகள் (Comments)