உசூலுல் ஹதீஸ் பாகம் 27

உசூலுல் ஹதீஸ்

பாகம்-27

ஹவாரிஜுகளுக்கும் சுன்னாவிற்கும் உள்ள நிலைப்பாடு:

நபி (ஸல்) வின் சுன்னாக்களில் முத்தவாதிராக(ஏராளமான அறிவிப்பாளர்களுடன் வரும் ஹதீஸை) வருவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆஹாதுகளை (குறைந்த அறிவிப்பாளர் வரிசையிலுள்ள ஹதீஸ்) ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தில் இருந்தார்கள்.

அவர்கள் நிராகரித்தவை:

  • திருமணம் செய்தவர் விபச்சாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற சட்டத்தை மறுத்தார்கள்.
  • உளூச்செய்யும்போது காலுறையின் மீது தடவுதலை மறுத்தார்கள்.
  • திருடியவருக்கு மணிக்கட்டு வரை கையை வெட்டவேண்டும் என்ற சட்டத்தை தோள்பட்டை வரை வெட்ட வேண்டும் என மாற்றியமைத்தார்கள்.
  • ஒரு தங்கக்காசின் நான்கின் ஒரு பங்கின் அளவு திருடியிருந்தால் தான் கை வெட்டப்படவேண்டும் என்ற ஹதீஸை நிராகரித்து ஒரு சிறிய முட்டையை திருடினாலும் கை வெட்டப்படவேண்டும் என்று கூறினார்கள்.
  • தஜ்ஜாலின் வருகை சம்மந்தமான ஹதீஸுகளை நிராகரித்தார்கள்.
  • மறுமையில் நபி (ஸல்) சிபாரிசு செய்யும் விஷயத்தையும் நிராகரித்தார்கள்.
  • சில ஸஹீஹான ஹதீஸுகளை குர்ஆனுக்கு முரண்படுவதாகக்கூறி நிராகரித்தனர்.
  • குர்ஆனில் ஒரு பெண்ணை அவதூறு சொன்னால் தான் கசையடி கொடுக்கவேண்டும் என்றிருக்கிறது ஆகவே ஆண்களை அவதூறு சொன்னால் கசையடி இல்லயென்றார்கள்.
  • சாராயம் குடித்தவருக்கு கசையடி இல்லையென்று மறுத்தார்கள்.