ஃபிக்ஹ் பாகம் – 5
உளூவின் ஃபர்ளுகள்
4. தலையை தடவுதல் (மஸஹ்):
❈ முடிமுளைக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து பிடரி வரை தடவ வேண்டும்.
❈ நபி (ஸல்) தன் இரண்டு கைகளையும் வைத்து தலை முழுவதும் மஸஹ் செய்தார்கள்.
தலையை மூடியிருந்தால் :
❈ பிலால் (ரலி) – நபி (ஸல்) – உங்கள் இரண்டு காலுறையின் மீதும் தலை பாகை மீதும் மஸஹ் செய்யுங்கள் – புஹாரி, அஹ்மத், இப்னு மாஜா
❈ முஃகைரா இப்னு ஷுஅபா (ரலி) – நபி (ஸல்) – தன முன் நெற்றி முடியில் தடவிவிட்டு தலைப்பாகை மீது மஸஹ் செய்திருக்கிறார்கள் (முஸ்லீம்)
5. இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவுதல்.
6. முறையாக செய்யவேண்டும்.
ஃபிக்ஹ் இமாம்கள் கூறுகிறார்கள்:
கழுவவேண்டிய உறுப்புகளும், தடவக்கூடிய உறுப்புகளும் வரும்போது தனித்தனியே சொல்ல வேண்டும். ஆனால் இப்படித்தான் செய்யவேண்டும் என்பதால் தான் அல்லாஹ் இதில் தலையை தடவுதலை இடையில் கூறுகிறான் என்று கூறுகிறார்கள்.
முறைப்படி செய்ய வேண்டும் என அல்லாஹ் விரும்புகிறான் ஆகவே நாம் உளூவை முறைப்படி செய்யவேண்டும்.
உளூவின் ஃபர்ளுகள் 6
- நிய்யத்
- முகத்தை கழுவுதல்
- கைகள் ( முழங்கைகள் வரை )
- தலையை தடவுதல் ( மஸஹ் )
- இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவுதல்
- முறையாக செய்யவேண்டும்
கருத்துரைகள் (Comments)