ஃபிக்ஹ் பாகம் – 5
உளூவின் சுன்னத்துக்கள்
[highlight color=”green”]தாடியை குடைந்து கழுவுவது[/highlight]
🌹 உத்மான் (ரலி) – நபி (ஸல்) தன்னுடைய தாடியை குடைந்து கழுவுவார்கள் (இப்னு மாஜா, திர்மிதி – ஸஹீஹ் என்று கூறுகிறார்)
🌹 அனஸ் (ரலி) – நபி (ஸல்) உளூ செய்தால் தண்ணீரை நாடிக்கு கீழாக செலுத்தி பிறகு தாடியை குடைந்து கழுவுவார்கள் பிறகு நபி (ஸல்) கூறினார்கள் கண்ணியத்திற்கும் உயர்வுக்குமுரிய என்னுடைய இறைவன் என்னிடம் இப்படி ஏவினான் என்று கூறினார்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் பைஹகீ, ஹாகிம்)
🌹 இந்த நேரத்தில் தாடி வைப்பது கடமை அதை மழிப்பது ஹராம் என்பதையும் நாம் விளங்கியவர்களாக இருக்க வேண்டும்.
கருத்துரைகள் (Comments)