ஃபிக்ஹ் பாகம் – 1
உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்
முன்பின் துவாரத்தினால் ஏதேனும் வெளியாகுதல் :
1. சிறுநீர்
2. மலம் கழிப்பது
ஸூரத்துல் மாயிதா 5:6
அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;
3. பின் துவாரத்தினால் காற்று வெளியாகுதல்:
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் சிறு தொடக்கு ஏற்பட்டு விட்டால் அவர் உளூ செய்யும் வரை அவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஒருவர் அபூஹுரைரா (ரலி) யிடம் – சிறுதொடக்கு என்றால் என்ன? – பின்துவாரத்தினால் காற்று போவது (புஹாரி, முஸ்லீம்).
(வயிற்றில் குழப்பம் ஏற்பட்டால் சந்தேகமேற்பட்டால்)
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சத்தத்தையோ, வாடையோ உணராத வரை தொழுகையிலிருந்து வெளியாக வேண்டாம் (முஸ்லீம்).
4. مني – இந்திரியம்
5. مذي – இச்சை நீர்
6. ودي – சிறுநீரும் பிறகு வரக்கூடிய ஒரு வழுவழுப்பான நீர்.
கருத்துரைகள் (Comments)