கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 22

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 22

புத்தக ஆசிரியர் மாணவர்களை 3 விதமாக பிரிக்கிறார்; மாணவர்களிடம் இருக்கக்கூடாத தன்மைகள் என சில உபதேசங்கள் அளிக்கிறார்கள்.

💕 பகல் கனவு காண்பவன்  حلم اليقظة .

💕 திறமையில்லாத அறிவில்லாதாவர் தனக்கு அறிவிருப்பது போல் காண்பித்தல்.

புத்தக ஆசிரியர் கல்வியாளர்களை 3 தரமாக பிரிக்கிறார்கள்

💕 ஆரம்ப நிலை கல்வி பயில்பவர்கள்.

💕 சிறிது அறிவுடன் இருக்கும் பணிவு கலந்த நிலை.

💕 அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அதிகமாக படிப்பார்கள் அதிகமாக படிக்கும்போது தனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் நிலையில் இருப்பார்கள்.

புத்தக ஆசிரியர் கூறும் பழமொழி:-

பக்குவமடைவதற்கு முன்னரே தான் பக்குவமடைந்ததாக காட்டிக்கொள்பவர் தன்னை அழித்துக்கொள்வதற்கு சவால் விடுக்கிறார்.

ஷேக் உஸைமீன் அவர்கள் பக்குவமடைந்ததாக தன்னைத்தானே காண்பிப்பவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என விளக்கமளிக்கிறார்கள்.

💕 தமக்கு எல்லாம் தெரியும் என்ற தன்னை பற்றிய பெருமிதமும் பூரிப்பும் மமதையும் உடையவர்களாக இருப்பார்கள்.

💕 மார்க்கத்தை விளங்கி வாழ்ந்த ஸஹாபாக்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விளங்கி புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்காது.

💕 வாயில் வந்தவற்றையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் பேசுவது

💕 சத்தியத்தை எடுத்து சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு ஊரில் மார்க்க அறிவில் முதிர்ச்சி அடைந்தவர்கள் இல்லாத பட்சத்தில் மார்க்கத்தை பற்றிய சிறிய ஞானம் உள்ளவர்கள் பேசலாம் ஆனால் சர்ச்சைக்குரிய விஷங்களையோ, கருத்து வேறுபாடுகள் உள்ள விஷயங்களையோ பற்றி அவரிடம் கேட்கப்பட்டால் கற்றுத்தேர்ந்த பெரியவர்களிடம் கேட்டுச்சொல்கிறேன் என்று அவர்கள் கூற வேண்டும்.