சஜ்தா சஹ்வு பாகம் 07

ஃபிக்ஹ் 

சஜ்தா சஹ்வு

பாகம் – 7

1 – நபி (ஸல்) சுருக்கமாக தொழுதபோது; விட்ட ரக்காத்துகளை மீண்டும் தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு சஜ்தா சஹ்வு செய்தார்கள் 

2 – நபி (ஸல்) அதிகமாக தொழுதபோதும் ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு சஜ்தா சஹ்வு செய்தார்கள் 

அத்தஹிய்யாத் விடுப்பட்டுவிட்டால் 

ابن بحينة: (أن النبي صلى اللَّه عليه وآله وسلم صلى فقام في الركعتين فسبحوا به فمضى

فلما فرغ من صلاته سجد سجدتين ثم سلم

↔ فقام في الركعتين

இரண்டு ரக்காத்துக்களில் எழுந்து விட்டார்கள் 

↔ فسبحوا به

(நபி ஸல்) வுக்கு தஸ்பீஹ் சொல்லி சுட்டிக்காட்டப்பட்டது  

↔ فمضى

(நபி ஸல் கவனிக்காமல்) போய் விட்டார்கள் 

فلما فرغ من صلاته

 தொழுகையை முடித்த போது 

↔ سجد سجدتين ثم سلم

இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பிறகு ஸலாம் கொடுத்தார்கள் 

إذا قام أحدكم من الركعتين، فلم يستتم قائما فليجلس، فإذا استتم قائما فلا يجلس، ويسجد

سجدتي السهو

↔ إذا قام أحدكم من الركعتين

உங்களிலொருவர் இரண்டு ரக்காத்தில்(அத்தஹிய்யாத்தில் உட்காராமல்) எழுந்தால் 

↔ فلم يستتم قائما فليجلس 

நிற்பது முழுமையடையவில்லையென்றால் அவர் உட்காரட்டும் 

↔  فإذا استتم قائما فلا يجلس

அவர்  முழுமையாக \நின்று விட்டால் உட்கார வேண்டாம் 

↔ ويسجد سجدتي السهو

அவர் சஜ்தா சஹ்வு வை செய்யட்டும்.

🌷 முகீரா (ரலி) – நபி (ஸல்) -உங்களிலொருவர் இரண்டு ரக்காத்திற்கு பிறகு அத்தஹிய்யாத்தில் உட்காராமல் எழுந்து முழுமையாக   எழும் முன் ஞாபகம் வந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும் முழுமையாக எழுந்து விட்டால் சஜ்தா சஹ்வு செய்துக்கொள்ளட்டும் ( அஹ்மத்,அபூதாவூத், இப்னு மாஜா )