ஃபிக்ஹ்
சஜ்தா திலாவத்
பாகம் – 2
❖ ஸஜ்தா சஹு தொழுகையல்லாத நேரங்களில் செய்தல் அதற்கு அத்தஹிய்யாதோ சலாமோ கொடுப்பதில்லை.
❖ அபூஹுரைரா (ரலி) ஸஹாபாக்களுக்கு தொழுகை நடத்தியபோது குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் சொன்னார்கள். பிறகு நான் நபி (ஸல்) தொழுதது போன்றே தொழ வைத்திருக்கிறேன்.(புஹாரி)
❖ ஆகவே இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழுகையில் சஜ்தா திலாவத் வந்தால் சுஜூதிற்கு போகும்போதும் நிமிரும்போதும் தக்பீர் சொல்ல வேண்டும் என்று அறிய முடிகிறது.
❖ இப்னு உமர்-நபி (ஸல்) எங்களுக்கு குர்ஆனை ஓதுவார்கள் இடையில் சஜ்தாவுடைய ஆயத்து வந்தால் தக்பீர் கூறி சுஜூது செய்வார்கள் நாங்களும் உடன் சஜ்தா செய்வோம்.
❖ இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழுகையல்லாத நேரத்தில் சுஜூதிற்கு செல்லும்போது மட்டுமே தக்பீர் சொன்னால் போதுமானது.
கருத்துரைகள் (Comments)