சுன்னத்தான தொழுகைகள் 05

சுன்னதான தொழுகைகள்

பாகம் – 5

மஃரிபுக்கு முன்னால் 2

صلوا قبل المغرب صلوا قبل المغرب ثم قال في الثالثة لمن شاء

❤ அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்)-மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் பின்னர் விரும்பியவர்களுக்கு என்று கூறினார்கள் كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً ஏனெனில் மக்கள் அதை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக எடுத்துவிடுவார்களோ என எண்ணி விரும்பியவர்கள் என கூறினார்கள்  – (புஹாரி)

❤ நபி (ஸல்) – மஃரிபுக்கு முன்னால் 2 ரக்காத் தொழுதிருக்கிறார்கள்.(இப்னு ஹிப்பான்)

وَكُنَّا نُصَلِّي عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ قَبْلَ صَلاةِ الْمَغْرِبِ فَقُلْتُ : هَلْ كَانَ

النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاهُمَا ؟ قَالَ : قَدْ كَانَ يَرَانَا نُصَلِّيهِمَا فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا ” . 

❤ இப்னு அப்பாஸ் (ரலி) – நாங்கள் மஃரிபுக்கு முன் 2 ரக்காத் தொழுபவர்களாக இருந்தோம்.நபி (ஸல்) எங்களை பார்ப்பார்கள் எங்களை அவர்கள் அந்த தொழுகையை ஏவவும் மாட்டார்கள் தடுக்கவும் மாட்டார்கள்.(முஸ்லிம்)

❤ இப்னு அப்பாஸ் (ரலி) – நாங்கள் மஃரிபுக்கு பாங்கு சொன்னால் தூண்களை நோக்கி விரைந்து சென்று தொழுவோம் 2 ரக்காத் சுன்னத் தொழுவதற்காக.