ஜனாஸா சட்டங்கள் 13

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 13

மரணித்தவர் முகத்தை திறந்து பார்ப்பதும் முத்தமிடுவதும் ஆர்ப்பாட்டமில்லாமல் அழுவதும் கூடும்.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) – என்னுடைய தந்தை உஹத் போர்க்களத்தில் கொல்லப்பட்டபோது நான் அவருடைய முகத்தை திறந்துபார்த்து அழுதேன் அப்போது அங்குள்ளவர்கள் என்னை தடுத்தார்கள்.

  1. ஆயிஷா(ரலி)கூறினார்கள்’ நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூபக்கர் (ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூபக்கர் (ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைவது விட்டீர்கள்’ என்று கூறினார்.

Book : 23 புஹாரி,   (முஸ்லீம் பைஹகீ)

மேற்கூறப்பட்ட செய்தியில் மரணித்தவரை முத்தமிடுவதும் அழுவதும் முகத்தை பார்ப்பதும் கூடும் என்று விளங்கிக்கொள்ள முடியும்.

  1. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்’ என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக்கவலைப்படுகிறோம்’ என்றார்கள்.

Volume :2 Book :23 புஹாரி 

ஜாபர் (ரலி) அவர்களது மரணத்திற்கு பிறகு 3 நாட்கள் வரை அவரது வீட்டிற்கு சென்று அனுதாபம் தெரிவிக்க அனுமதித்தார்கள். அதன் பின் தடுத்துவிட்டார்கள்.