ஜமாஅத் தொழுகை
பாகம்-10
عن ابن عباس رضي الله عنه قال : (بت عند خالتي ميمونة فقام النبي صلى الله عليه وسلم يصلي من الليل فقمت
أصلي معه فقمت عن يساره فأخذ برأسي وأقامني عن يمينه
❣ அனஸ் (ரலி) – நான் என்னுடைய தாயின் சகோதரி மைமுனா (ரலி) அவர்களுடைய வீட்டில் ஒரு இரவு தங்கினேன். நபி (ஸல்) அவர்கள் இரவு தொழுகை தொழுவதற்காக எழுந்தாரகள். நானும் அவர்களுடன் எழுந்து தொழ வந்தேன். நபி அவர்களுடைய இடது பக்கத்தில் நின்றபோது அவர்கள் என் தலையை பிடித்து, (இன்னொரு ரிவாயத்தில் காதை பிடித்து என்று வருகிறது) அவர்களுடைய வலது பக்கம் என்னை நிறுத்தினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் இருவர் மட்டுமே இருந்தாலும் ஜமாஅத்தாக தொழலாம் என்று விளங்கிக்கொள்ளலாம்.
❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காக எழுந்தபோது நான் அவர்களுடைய இடது பக்கம் நின்றேன். எனது கையை பிடித்து அவர்களுடைய வலது பக்கமாக நிற்க வைத்தார்கள். பிறகு ஜாபிர் இப்னு ஸஹர் (ரலி) அவர் வந்தார் நபி(ஸல்) அவர்களுடைய இடது பக்கம் நின்றார்கள். அப்போது நபி (ஸல்) எங்கள் இருவரின் கையையும் பிடித்து எங்களை பின்னால் நிலைநிறுத்திவிட்டார்கள்.
(ஸஹிஹ் முஸ்லிம், சுனன் அபுதாவுத்)
கருத்துரைகள் (Comments)