ஜமாஅத் தொழுகை
பாகம்-14
தொழுகையின் வரிசையில் நிற்கும் முறை :
- இமாமிற்கு பின்னாலிருந்து ஆரம்பிக்க வேண்டும்
- ஒரு வரிசை முழுமையடையாமல் அடுத்த வரிசைக்கு செல்லக்கூடாது
سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاةِ
❣ அனஸ் (ரலி) – நபி(ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லுவதற்கு முன் தொழுகையின் வரிசைகளை திரும்பி பார்ப்பார்கள்.பிறகு “நெருக்கமாக நில்லுங்கள், நீளமாக நில்லுங்கள் தொழுகையை முழுமையாக்கும் காரியங்களில் இதுவும் ஒன்று ” என்று கூறுவார்கள்.
(புஹாரி, முஸ்லிம்)
عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال أقيموا صفوفكم فإني أراكم من وراء ظهري وكان أحدنا
يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه
❣ அனஸ் (ரலி)-நாங்கள் தொழுகையில் எங்கள் தோள் புஜங்களையும் கால் பாதங்களையும் வலதும்; இடதும் பக்கம் இருப்பவருடன் ஒட்டி நிற்போம்.(புஹாரி)
கருத்துரைகள் (Comments)