ஜமாஅத் தொழுகை
பாகம்-16
خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبًا فِي الصَّلاةِ ، وَمَا مِنْ خُطْوَةٍ أَعْظَمُ أَجْرًا مِنْ خُطْوَةٍ مَشَاهَا رَجُلٌ إِلَى فُرْجَةٍ فِي صَلاةٍ فَسَدَّهَا ” .
❣ இப்னு உமர் (ரலி) ஒரு மனிதன் எடுத்து வைக்கக்கூடிய அடிகளில்; இறைவனிடம் சிறந்த அடி முன்வரிசையில் இருக்கும் ஒரு இடத்தை அடைப்பதற்காக செல்லும் அடியே ஆகும். (முஸ்னத் பஸ்ஸார்)
❣ நபி (ஸல்) – யார் ஒரு சஃப்பில் உள்ள இடைவெளியை சேர்ப்பதற்காக செல்லுகிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக்கொள்வானாக. யார் ஒரு சஃப் ஐ துண்டிக்கிறாரோ, அவரை அல்லாஹ்வும் துண்டித்துவிடுவானாக
(ஸுனன் நசயீ)
❣ ஜாபிர் இப்னு சமுரா (ரலி) -நபி (ஸல்) – ஒரு முறை எங்களிடம் வந்தார்கள். “மலக்குமார்கள் அல்லாஹ்விடத்தில் சஃப்-ஆக நிற்பது போன்று நீங்கள் நிற்கக்கூடாதா?” என்று கேட்டார்கள். நாங்கள் கேட்டோம், “யா ரஸூலுல்லாஹ், அல்லாஹ்விடத்திலே மலக்குமார்கள் எப்படி சஃப்-ஆக நிற்கிறார்கள்?” முதல் வரிசையை முழுமைப்படுத்துவார்கள். பிறகு அதை நெருக்குவார்கள்.
(புஹாரி)
கருத்துரைகள் (Comments)