தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 100
❤ வசனம் : 59
وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ كَذٰلِكَ يُبَيِّنُ
اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்
⬇️↔ وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ
உங்கள் பிள்ளைகள் பருவ வயதை அடைந்து விட்டால்
⬇️↔ فَلْيَسْتَـاْذِنُوْا
அவர்கள் அனுமதி கேட்கட்டும்
⬇️↔ كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ
தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல்
⬇️↔ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖؕ
இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்
⬇️↔ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
💠 பிள்ளைகளும் பெற்றோரும் ஒரே அறையில் உறங்கும் நிலையிலிருந்தால் பெற்றோர் கவனமாக இருத்தல் அவசியமாக இருக்கிறது
கருத்துரைகள் (Comments)