தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 102

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 102

❤ வசனம் : 61

⬇️↔ لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ

குருடர்களும் குற்றமில்லை

⬇️↔ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ

ஊனமுற்றோர்களுக்கும் குற்றமில்லை

⬇️↔ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ

நோயாளிகளுக்கும் குற்றமில்லை

⬇️↔ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ

உங்களுக்கும் (குற்றமில்லை)

⬇️↔ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُم

உங்களுடைய வீடுகளில் சாப்பிடுவதற்கும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ

அல்லது உங்களுடைய பெற்றோருடைய வீடுகளில்

⬇️↔ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ

அல்லது உங்கள் தாய்மார்களின் வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ

அல்லது உங்களுடைய சகோதரர்களுடைய வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ

அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ

அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ

அல்லது உங்களுடைய தந்தையின் சகோதரிகள் வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُم

அல்லது உங்கள் தாயின் சகோதரர்களுடைய வீடுகளிலும்

⬇️↔ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ

அல்லது உங்கள் தாயின் சகோதரிகளுடைய வீடுகளிலும்

⬇️↔ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗ

யாருடைய வீட்டு சாவிகளை நீங்கள் வைத்திருக்கிறீர்களா அவர்களுடைய வீடுகளிலும்

⬇️↔ اَوْ صَدِيْقِكُمْ‌ؕ

அல்லது உங்களுடைய நண்பர்கள் வீடுகளிலும்

⬇️↔ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ

யாருடைய வீட்டு சாவிகளை நீங்கள் வைத்திருக்கிறீர்களோ அவர்களுடைய வீடுகளில் சாப்பிடுவதிலும்

கருத்து:-

அந்த காலத்தில் வெளி ஊர்களுக்கு செல்லும்போது வீட்டின் சாவிகளை கண்பார்வையில்லாதவர்களிடமோ அல்லது ஊனமுற்றவர்களிடமோ கொடுத்து வீட்டில் உள்ளதை சாப்பிடுமாறு கூறிச்செல்வார்கள். ஆயினும் அவர்கள் சாப்பிட கூச்சப்படுவார்கள். எனவே தான் இந்த சட்டத்தை அல்லாஹ் தெளிவு படுத்தினான் என்று ஒரு கருத்து உள்ளது.

لا يحل مال امرئ مسلم إلا بطيب نفس منه

💠 நபி (ஸல்) – ஒரு மனிதனுடைய பொருள் அவன் மனம் விரும்பித்தாராமல் அது ஹலால் ஆகாது

💠 மேற்கூறப்பட்ட வீடுகளில் உண்பதை அவர்கள் வெறுப்பர்களாயின் அவர்களிடம் அனுமதி கேட்பது சிறந்தது என்று சில விரிவுரையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

⬇️↔ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ

உங்களுடைய வீடுகளில் சாப்பிடுவதற்கும்

💠 உங்களுடைய வீடு என்றால் அதில் உங்களுடைய பிள்ளைகளுடைய வீடும் அடங்கும்.

⬇️↔ أنت ومالك لأبيك

நபி (ஸல்) – நீயும் உன் சொத்தும் உன் தந்தைக்கு சொந்தம்.

⬇️↔ اَوْ صَدِيْقِكُمْ‌ؕ

அல்லது உங்களுடைய நண்பர்கள் வீடுகளிலும் (சாப்பிடுவதில் குற்றமில்லை)

💠 ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் வீட்டில் நண்பர்கள் வந்து சாப்பிட்டுக்  கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உணவை அருந்தினார்கள். அதை கண்ட ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் முகம் பிரகாசித்தது பிறகு ஸஹாபாக்கள் இப்படி தான் இருந்தார்கள் என கூறினார்கள்.