தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 109

தஃப்ஸீர் பாகம் – 109

சூரத்துந் நூர்

وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰٓى اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌

وَاِذَا ↔ போது

كَانُوْا ↔ அவர்கள் இருந்தார்கள்

مَعَهٗ ↔ அவருடன் (நபியுடன்)

عَلٰٓى اَمْرٍ ↔ ஒரு விஷயத்தில்

جَامِعٍ ↔ கூட்டாக(ஒன்றாக)

لَّمْ يَذْهَبُوْا ↔ போக மாட்டார்கள்

حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ ↔ அனுமதி பெரும் வரை

💠 மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது; அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்.

💠 முனாஃபிக்குகள் பொதுவான காரியங்களுக்கு (ஜிஹாத் போன்ற முக்கிய விஷயங்களுக்கு) வந்தால் அனுமதி பெறாமல் செல்பவர்களாக இருந்தார்கள்.