தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 110

தஃப்ஸீர் பாகம் – 110

சூரத்துந் நூர்

اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌

اِنَّ↔உறுதிப்படுத்தும் ஹர்ஃப்(நிச்சயமா

الَّذِيْنَ↔அத்தகையவர்கள்

يَسْتَـاْذِنُوْنَكَ↔உம்மிடம் அனுமதி கேட்பவர்கள்

اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ↔அவர்கள்தான்

يُؤْمِنُوْنَ↔ஈமான் கொண்டார்கள்

بِاللّٰهِ↔அல்லாஹ்வை கொண்டும்

وَرَسُوْلِهٖ‌↔மேலும் அவனது தூதரிலும்

💠 (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள்

فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ

فَاِذَا اسْتَاْذَنُوْكَ↔உம்மிடம் அனுமதி கேட்கும் போது

لِبَعْضِ↔சில

شَاْنِهِمْ↔அவர்களுடைய காரியங்களுக்காக

💠 சில காரியங்களுக்காக உம்மிடம் அனுமதி கேட்டால்

فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

فَاْذَنْ↔அனுமதியுங்கள்  

لِّمَنْ شِئْتَ↔நீங்கள் நாடியவருக்கு

مِنْهُمْ↔அவர்களில்

💠 அவர்களில் நீர் நாடியவருக்கு அனுமதி விடுங்கள்

وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ‌ؕ

وَاسْتَغْفِرْ↔பாவ மன்னிப்பு தேடுங்கள்  

لَهُمُ اللّٰهَ‌ؕ↔அவர்களுக்காக அல்லாஹ்விடம்

💠 அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேளுங்கள்

اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

اِنَّ اللّٰهَ↔நிச்சயமாக அல்லாஹ்

غَفُوْرٌ↔மிகவும் மன்னிப்பவன்

رَّحِيْمٌ‏↔மிகவும் அன்பு காட்டக்கூடியவன்

💠 நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; அன்புகாட்டக்கூடியவன்

❤ ஸூரத்துஜ்ஜுமர் 39:53

قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ

الرَّحِيْمُ‏

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.