தஃப்ஸீர் பாகம் – 111
சூரத்துந் நூர்
❤ வசனம் 63
لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا ۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ
يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
لَا تَجْعَلُوْا↔ஆக்காதீர்கள்
دُعَآءَ الرَّسُوْلِ↔ரஸூலின் அழைப்பை
بَيْنَكُمْ↔உங்களுக்கிடையில்
كَدُعَآءِ↔அழைப்பை போல
بَعْضِكُمْ بَعْضًا ؕ↔உங்களிலொருவர் மற்றவரை
💠 உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப்போன்று; அல்லாஹ்வின் தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள்.
روى البخاري عن أبي سعيد بن المعلى قال : كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم
فلم أجبه ، ثم أتيته فقلت : يا رسول الله ، إني كنت أصلي . فقال : ألم يقل الله عز وجل استجيبوا لله وللرسول
إذا دعاكم لما يحييكم وذكر الحديث وقد تقدم في الفاتحة
💠 அபீ சயீத் இப்னு மஹ்லா (ரலி) – நான் மஸ்ஜிதில் தொழுதுகொண்டிருக்கும்போது நபி (ஸல்) என்னை அழைத்தார்கள் நான் பதிலளிக்கவில்லை தொழுகை முடிந்ததும் தொழுகையில் இருந்ததால் தான் பதிலளில்லவில்லை என்று நான் கூறியதும் நபி (ஸல்) இந்த ஆயத்தை ஓதி காட்டினார்கள்
❤ ஸூரத்துல் அன்ஃபால் 8:24
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْۚ
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்;
(புஹாரி)
கருத்துரைகள் (Comments)