தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 113

தஃப்ஸீர் பாகம் – 113

சூரத்துந் நூர்

فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ

فَلْيَحْذَرِ↔அஞ்சி கொள்ளட்டும்

الَّذِيْنَ↔அத்தகையவர்கள்

يُخَالِفُوْنَ↔மாறு செய்கிறார்கள்

عَنْ اَمْرِهٖۤ↔அவரது கட்டளைக்கு

💠ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ.

اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

⬇️↔ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ

சோதனை ஏற்படுவதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கட்டும்

اَوْ↔அல்லது

يُصِيْبَهُمْ↔அவர்களை வேதனை பிடித்து கொள்வதை

عَذَابٌ اَ لِيْمٌ‏↔நோவினை செய்யும் வேதனை

💠 அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

❤ ஸூரத்துல் அஹ்ஜாப 33:36

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ…

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை;

اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)

💠 அவர்களின் கருத்துப்படி இங்கு ஃபித்னா என்பது ஷிர்க்கை குறிக்கும். ஏனெனில் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து இறுதியில் ஷிர்க்கில் கொண்டு வந்து முடியும் என்றார்கள்.

இமாம் இப்னு கஸீர் (ரஹ்)

💠 அவர்களுடைய உள்ளங்களில் குஃப்ர், அல்லது நயவஞ்சகம் அல்லது பித்அத் ஏற்படும் என விளக்கமளித்தார்கள்.

اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

💠 நோவினை தரும் வேதனை இம்மையிலா அல்லது மறுமையிலா என்பதில் பல கருத்துக்கள் நிலவுகின்றது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا

ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلا فَشَا فِيهِمُ الطَّاعُونُ

وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلافِهِمِ الَّذِينَ مَضَوْا….

💠 இப்னு உமர் (ரலி) – ஒரு  நாள் நபி (ஸல்) எங்களை நோக்கி வந்து ஓ முஹாஜிர்களே 5 விஷயங்களைக்கொண்டு நீங்கள் சோதிக்கப்பட்டால் உங்களை அது பிடித்துகொள்ளாமலிருக்க நான் அல்லாஹ்விடம்  பாதுகாவல் தேடுகிறேன். ஒரு சமுதாயத்தில் ஆபாசம் வெளிப்படும் அவர்களுக்கு முன்னால் சென்றவர்களுக்கு வராத நோய்களும் பிளேகு நோயும் வரும். அளவை நிறுவைகளில் அவர்கள் மோசடி செய்தல் அவர்களுக்கு பஞ்சமும் பொருளாதார சிரமமும் மன்னர்களுடைய அடக்குமுறை அவர்களை ஆக்கிரமிக்கும். ஜகாத் கொடுப்பதை அவர்கள் தடுத்துக்கொண்டால் வானத்திலிருந்து அவர்கள் மழை தடுக்கப்படும். விலங்குகள் இல்லையென்றால் அவர்களுக்கு மழை கிடைக்காது.அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் அவர்கள் செய்த உடன்படிக்கைகளை அவர்கள் மீறினால் அல்லாஹ் அவர்களுடைய எதிரிகளை அவர்கள் மீது ஏவி விடுவான்.இவர்களுடைய கையிலுள்ளவற்றை எதிரிகள் பறித்து செல்வார்கள். அவர்களுடைய ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் இருந்தால் அவர்களுக்கு மத்தியிலேயே அல்லாஹ் சண்டைகளை ஏற்படுத்துவான்.

(இப்னு மாஜா, ஹாகிம், பாஸ்ஸார், பைஹகீ-ஷேக் அல்பானி ஸஹீஹ் லி கைரிஹி)