தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 114

தஃப்ஸீர் பாகம் – 114

சூரத்துந் நூர்

 வசனம் 64

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ قَدْ يَعْلَمُ مَاۤ اَنْـتُمْ عَلَيْهِؕ وَيَوْمَ يُرْجَعُوْنَ اِلَيْهِ فَيُنَـبِّـئُـهُمْ بِمَا عَمِلُوْا ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

اَلَاۤ اِنَّ لِلّٰهِநிச்சயமாக அல்லாஹ்விற்குரியது

مَاஎதுவோ

⬇️ ↔ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ 

வானங்களிலும் பூமியிலும்

💠 வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக

قَدْ يَعْلَمُஅவன் அறிகிறான்

مَاۤ اَنْـتُمْ عَلَيْهِؕநீங்கள் எதன் மீது இருக்கிறீர்கள் என்று

💠 நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்

وَيَوْمَ يُرْجَعُوْنَ اِلَيْهِ فَيُنَـبِّـئُـهُمْ بِمَا عَمِلُوْا ‌ؕ

وَيَوْمَநாளில்

يُرْجَعُوْنَதிருப்பப்படும்

اِلَيْهِஅவனிடம்  

فَيُنَـبِّـئُـهُمْஅவர்களுக்கு அறிவிப்பான்

بِمَا عَمِلُوْا ‌ؕஅமல் செய்ததை

💠 மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான்