தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 115

தஃப்ஸீர் பாகம் – 115

சூரத்துந் நூர்

💠 நபி (ஸல்) – அல்லாஹ் உங்கள்  ஒவ்வொருவருடனும் மறுமையில் நேரடியாக பேசுவான் அல்லாஹ்வின் முன் நிற்கையில் வலது பக்கம் அவன் செய்த அத்தனை செயல்களும் இருக்கும் இடது பக்கம் பார்த்தாலும் அவன் செய்த அத்தனையும் இருக்கும் முன்னால் நரகம் கொதித்துக்கொண்டிருக்கும்.

❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:49

وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا‌

இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்….

❤ ஸூரத்துஜ் ஜில்ஜால் 99:7; 8

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏

(7) எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்

وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏

(8) அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.