தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 19
❤ வசனம் 15
اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ۖ
وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ
உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு ↔ بِاَ لْسِنَتِكُمْ اِذْ تَلَـقَّوْنَهٗ
மேலும் நீங்கள் கூறுகிறீர்கள் ↔ وَتَقُوْلُوْنَ
உங்கள் வாய்களால் ↔ بِاَ فْوَاهِكُمْ
(اسم موصول) ஒன்று ↔ مَّا
உங்களுக்கு இல்லை ↔ لَـيْسَ لَـكُمْ
அதைப்பற்றி அறிவு இல்லை ↔ بِهٖ عِلْمٌ
அதைப்பற்றி நினைக்கிறீர்கள் ↔ وَّتَحْسَبُوْنَهٗ
லேசானதாக ↔ هَيِّنًا
அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிதாக இருக்கும் ↔ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ
➥ இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
✴ படிப்பினை என்பது வசனத்தை வைத்து தான் எடுக்கவேண்டுமே தவிர சம்பவத்தை வைத்து அல்ல
✴ பித்னாவின் இந்த காலத்தில் காதுகளையும் வாய்களையும் பேணிக்கொள்வோம்
கருத்துரைகள் (Comments)