தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 2

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 2

குர்ஆனை நாம்

  • ஓத வேண்டும்.
  • ஆய்வு செய்ய வேண்டும்.
  • அதைக்கொண்டு அமல் செய்யவேண்டும்.

 ஸூரத்து தாஹா 20:124

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى

   “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.

 ஸூரத்து முஹம்மது 47:24 

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏

   மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக தப்ஸீரில்

  குர்ஆனில் சில பகுதி அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் (இந்த பகுதியை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பது நமக்கு ஆபத்தானது).

  இன்னும் சில அரபு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

  இன்னும் சில உலமாக்களை மட்டுமே புரியும்.

  இன்னும் சில அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும்.

நீங்கள் நல்லுபதேசம் பெறலாம் – لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ