தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 29

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 29

உஸ்மான் இப்னு அபுல்ஆஸ் (ரலி) நபி(ஸல்) விடம் – நான் தொழுகைக்குள் செல்லும் போது நல்ல எண்ணத்துடன் செல்கிறேன் தக்பீர் கட்டிவிட்டால் தொழுகையை விட்டு வெளியேறும் அளவிற்கு கவனம் சிதறுகிறது. நபி (ஸல்) – ஹின்ஸப் என்ற ஷைத்தான் இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துவான் அப்போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி இடது பக்கம் துப்புங்கள்.

يعقد الشيطان على قافين رأس أحدكم إذا هو نام ثلاث عقد يضرب كل عقدة عليك

ليل طويل فار قد فإن استيقظ فذكر الله انحات عقدة فإن توضأ انحلت عقدة فإن

صلى انحلت عقدة فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلان

அபூஹுரைரா (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் இரவில் தூங்கச்சென்றால் ஷைத்தான் 3 முடிச்சுகளை போடுகிறான் பிறகு அதன் மீது அடித்து உனக்கு நீண்ட இரவு இருக்கிறது என்று சொல்லுவான் ஒருவர் பஜ்ருடைய நேரத்தில் எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் அதிலிருந்து ஒரு முடிச்சி அவிழ்கிறது, பிறகு உளூ செய்தால் மற்றோரு முடிச்சும் பிறகு தொழுதால் 3 வது முடிச்சும் அவிழ்கிறது. (புஹாரி, முஸ்லீம்)

 நபி(ஸல்) – பஜ்ர் தொழாமல் தூங்குபவன் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்.