தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 37

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 37

❤ வசனம் 22 :

وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ

فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌‌ۖ  وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا‌ ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

   இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.

  அபூபக்கர் (ரலி) விஷயத்தில் இந்த வசனம் இறங்கியது

ஆயிஷா (ரலி) மீது அவதூறு பரப்பப்பட்டபோது அதை சில ஸஹாபாக்களும் நம்பிவிட்டார்கள் அதில் மிஸ்தஹ் என்ற ஸஹாபி இதை நம்பி அதை பற்றி பேசிவிட்டார்கள். அவருக்கு அன்று வரை செலவுக்கு பொறுப்பெடுத்திருந்த அபூபக்கர் (ரலி) இந்த விஷயம் கேள்விப்பட்டதும் இனிமேல் மிஸ்தஹ்விற்கு நான் எதுவும் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். அப்போது தான் இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கினான்

  இந்த வசனம் இறங்கியவுடன் மிஸ்தஹ் (ரலி) வை மன்னித்து ஏற்கனவே செலவுக்கு கொடுத்ததை விட அதிகமாக கொடுத்தார்கள்.