தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 39
❤ வசனம் 26:
اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِۚ اُولٰٓٮِٕكَ
مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ
➥ கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.
கெட்ட பெண்கள் – اَلْخَبِيْثٰتُ
கெட்ட ஆண்களுக்கு – لِلْخَبِيْثِيْنَ
கெட்டஆண்கள் – وَالْخَبِيْثُوْنَ
கெட்டபெண்களுக்கும் – لِلْخَبِيْثٰتِۚ
தூய்மையுடைய பெண்கள் – وَالطَّيِّبٰتُ
நல்ல தூய்மையுடைய ஆண்களுக்கு – لِلطَّيِّبِيْنَ
தூய்மையான ஆண்கள் – وَالطَّيِّبُوْنَ
தூய்மையான பெண்களுக்கு – لِلطَّيِّبٰتِۚ
அவர்கள் – اُولٰٓٮِٕكَ
தூய்மையானவர்கள் – مُبَرَّءُوْنَ
அவர்கள் சொல்வதிலிருந்து – مِمَّا يَقُوْلُوْنَؕ
அவர்களுக்கு மன்னிப்பும் – لَهُمْ مَّغْفِرَةٌ
கண்ணியமான உணவும் இருக்கிறது (சொர்க்கம்) – وَّرِزْقٌ كَرِيْمٌ
❋ இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நபி (ஸல்) விற்கு ஆறுதல் கூறுகிறான்.
21 – 26 வசனங்கள் ஆயிஷா (ரலி) அவர்களது நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது
கருத்துரைகள் (Comments)