தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 42
❤ வசனம் 28 :
فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْاۚ هُوَ اَزْكٰى لَـكُمْؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் – அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
↔ فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا
நீங்கள் அதில் எவரையும் காணவில்லையென்றால்
↔ فَلَا تَدْخُلُوْهَا
அதில் நுழைய வேண்டாம்
↔ حَتّٰى يُؤْذَنَ لَـكُمْۚ
உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை
↔ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا
உங்களிடம் திரும்பிவிடுங்கள் என்று கூறப்பட்டால்
↔ فَارْجِعُوْاۚ
நீங்கள் திரும்பி சென்றுவிடுங்கள்
↔ هُوَ اَزْكٰى لَـكُمْؕ
அதுவே உங்களுக்கு பரிசுத்தமாகும்
↔ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிகிறான்
❤ வசனம் 29 :
لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ مَسْكُوْنَةٍ فِيْهَا مَتَاعٌ لَّـكُمْ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ
(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
↔ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ
உங்கள் மீது குற்றமாகாது
↔ اَنْ تَدْخُلُوْا بُيُوْتًا
வீட்டில் நுழைவது
↔ غَيْرَ مَسْكُوْنَةٍ
அதில் உங்கள் பொருட்கள் எவரும் வசிக்காத
فِيْهَا مَتَاعٌ لَّـكُمْ ↔ இருந்து
↔ وَاللّٰهُ يَعْلَمُ
மேலும் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
↔ مَا تُبْدُوْنَ
நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும்.
↔ وَمَا تَكْتُمُوْنَ
மேலும் நீங்கள் மறைத்து வைப்பதையும்.
✴ இந்த வசனங்களின் பின்னணி
ஒரு அன்சாரி பெண்மணி நபி (ஸல்) விடம் வந்து நான் பிறர் காண்பதை விரும்பாத கோலத்தின் என் வீட்டில் இருக்கும்போது உறவினர்கள் வந்தால் என்ன செய்வது என்று கேட்டபோது இந்த வசனம் இறங்கியதாக கருத்து கூறுகின்றனர்.
கருத்துரைகள் (Comments)