தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 43
✴ பனூ அமீர் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களது வீட்டிற்கு சென்று வாசலில் நின்று உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். உடனிருந்தவரிடம் நபி (ஸல்) -வந்திருக்கும் மனிதருக்கு எப்படி அனுமதி `கேட்பது என்று சொல்லி கொடுங்கள் – முதலில் ஸலாம் சொல்லுங்கள் பிறகு அனுமதி கேளுங்கள்.
✴إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ ✴
கைஸ் இப்னு சகட இப்னு உபாதா (ரலி) – நபி (ஸல்) எங்கள் வீட்டிற்கு ஒரு முறை வந்தார்கள். ஸலாம் கூறினார்கள் என் தந்தை வ அலைக்கும் ஸலாம் என்று மெதுவாக சொன்னார்கள் அப்போது தந்தையே அல்லாஹ் வுடைய தூதருக்கு அனுமதி கொடுக்க மாட்டீர்களா என்று என் தந்தையிடம் கேட்டேன்-அப்படியல்ல நபி (ஸல்) வின் ஸலாம் நமக்கு கிடைக்குமல்லவா-நபி (ஸல்) 3 முறை ஸலாம் கூறினார்கள் பதில் கிடைக்காததால் திரும்பினார்கள்.-பிறகு ஓடி வந்து கதவை திறந்து வரவேற்று உங்களது ஸலாம் கிடைப்பதற்காகவே மெதுவாக ஸலாம் சொன்னோம் என்றார்கள்
கருத்துரைகள் (Comments)